56 வயதிலேயே அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 56 ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் 30 சதவீத ஊழியர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம்வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக உள்ளதாக பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்டன. போனஸ் தொடர்பாகவும்பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் நிதி நிலைமையை சரி செய்யும் பணியில் தற்போது அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. பல்வேறுதிட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக இரண்டு திட்டங்கள் அரசின் இறுதிக் கட்டபரிசீலனையில் உள்ளன.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58லிருந்து 56 ஆகக் குறைப்பது, மத்திய அரசைப் போலவே 30 சதவீத உபரிஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது ஆகியவைதான் அந்த முக்கிய திட்டங்கள்.
இதில் ஓய்வு வயதைக் குறைப்பது தொடர்பாக அரசு ஆணை தயார் ஆகி விட்டதாகவும் தெரிகிறது. இந்தநிதியாண்டு முதல் இது அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் உபரியாக இருக்கும் 30 சதவீத ஊழியர்களை விருப்ப ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பவும் மாநிலஅரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான திட்டம் தற்போது இறுதிக் கட்ட பரிசீலனையில்உள்ளதாகத் தெரிகிறது.
இந்த இரண்டு திட்டங்களையும் அமல்படுத்துவதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்புதெரிவிப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்பட்டாலும் கூட நிதி நிலையை சரி செய்ய இவை இரண்டும் அவசியம் என்று அரசு தரப்பு கருதுகிறது.
எனவே எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் இந்த இரண்டும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள்தெரிவித்தன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications