ஜம்மு-காஷ்மீர் விடுதலைப் படை தலைவர் கைது
ஸ்ரீநகர்:
இன்று (திங்கள்கிழமை) பத்திரிக்கை நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஜம்மு-காஷ்மீர் விடுதலைப்படைதலைவர் முகமது யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை குத் என்ற இடத்தில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போலீசார் சோதனையில்ஈடுபட்டிருந்த போது ஷஜீயா பேகம் என்ற பெண் உட்பட இருவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போதுஅந்த பெண்ணிடம் இருந்து ஒரு லட்சம் அமெரிக்க டாலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த பெண்ணை மேலும் விசாரித்ததில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஹூரியத் அமைப்பின்தலைவர் அல்டாப் காத்ரி தனக்கு அந்த பணத்தை நேபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்துக் கொடுத்ததாகக்கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) ராஜ்பாக் பகுதியில் உள்ள ஹூரியத் தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த மாலிக்கை போலீசார் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன்போலீசாரிடம் அனுமதி பெற்று மாலிக் கூறியதாவது:
ஜம்மூ-காஷ்மீர் விடுதலைப்படையின் செய்தித் தொடர்பாளர்தான் அல்டாப். ஹூரியத் அமைப்பின் பொதுச்செயலாளருமான அவர், கடந்த 7 வருடங்களாக நேபாளத்துக்கே செல்லவில்லை.
எனக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இது வரை அந்த பெண்ணை சந்தித்ததே இல்லை.அல்டாப் நேபாளத்திற்கு சென்றதையும், அந்த பெண்ணை எனக்கு தெரியும் என்பதையும் போலீசார் நிரூபித்தால்நான் இந்த விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்.
தேர்தலை நாங்கள் எதிர்ப்பதாகக் கூறியதால்தான் என்னை கைது செய்துள்ளனர். இதே போல் ஏற்கனவேஹூரியத் அமைப்பின் பல தலைவர்களை கைது செய்து, பிற மாநில சிறைகளில் அடைத்துள்ளனர் என்று மாலிக்கூறினார்.
மாலிக்கை போலீசார் கைது செய்யப் போவதைத் தெரிந்துகொண்ட அவருடைய ஆதரவாளர்கள் போலீஸ் ஜீப் மீதுகல்லெறிந்தனர். மேலும் ஜம்மு-காஷ்மீர் விடுதலைப்படையின் துணை தலைவர் ஜாவித் அகமது மீர் தலைமையில்30 விடுதலைப் படையினர், மாலிக்கின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications