எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. (10ம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் நாளை (புதன்கிழமை) தொடங்குகின்றன.
நாளை தொடங்கும் தேர்வுகள், ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளன. மாணவர்கள் தேர்வுஎழுவதற்காக 2,436 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடம் 7,42,152 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தவிர 1,12,106 தனித்தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்கள் காப்பி, பிட் அடிக்காமல் தடுப்பதற்காக, மாவட்ட கல்வி அலுவலர்கள், உயர் கல்வி அதிகாரிகள்கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்தவுடன் விரைவாக விடைத்தாள்களை திருத்துவதற்காக தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 50மதிப்பீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடமுடியும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரை கூறினார்.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications