நாகர்கோவில் சூதாட்ட கிளப்புகளில் ரெய்டு: 19 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சூதாட்ட கிளப்புகளில் நடந்த திடீர் சோதனையில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு கரூரில் சூதாட்ட கிளப்புகளில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் அதிமுகபிரமுகர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள சூதாட்ட கிளப்புகளிலும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இந்தச் சோதனையில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் மற்றும் டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications