இலங்கை: மே மாதம் அமைதிப் பேச்சு துவக்கம்?
கொழும்பு:
இலங்கை அரசுக்கம் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வரும் மே மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைதுவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்னும் ஆறு வாரத்தில், அதாவது மே மாதத் துவக்கத்தில் பேச்சுவார்த்தை துவங்கலாம் என்று தான்எதிர்பார்ப்பதாக பெய்ரிஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதற்காக புலிகள் மூன்று கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைமுழுமையாக அமல்படுத்த வேண்டும், தங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் மற்றும் இலங்கையின் வடக்குமற்றும் கிழக்குப் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் ஆகியவையே புலிகளின் கோரிக்கைகளாகும்.
இந்த மூன்றுமே இலங்கை அரசுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. தனி நாடு கோரிக்கை தவிர வேறு எதைவேண்டுமானாலும் செய்வதற்குத் தயார்தான் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்கனவே கூறியுள்ளார்என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கான சுமூகமான சூழ்நிலை உருவாகியுள்ளதை இருதரப்பினருமே உணர்ந்துள்ளதால், பேச்சுவார்த்தையைத் துவக்க இதுதான் சரியான நேரம் என்று கருதுகின்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று முதலில் இரு தரப்பிலும் ஒப்பந்தம்செய்து கொண்டால் வசதி என்று இலங்கை அரசு கருதுகிறது.
இதற்கிடையே நார்வே தூதுக் குழுவின் தலைவரும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருமான விடார்ஹெல்கெசன் அடுத்த மாதம் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்திக்கவுள்ளார்.
அதற்குப் பிறகுதான் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கான சரியான நாள் தெரிய வரும். அதற்கு முன்னதாகவே(ஏப்ரல் 8ம் தேதி) யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications