"ஜெ.ஜெ.-சசி பேரவை" தொடங்கியவரிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ்
சென்னை:
ஜெ.ஜெ.-சசிகலா என்ற பெயரில் பேரவையைத் துவக்கியவர் மன்னிப்புக் கேட்காவிட்டால், ரூ.1 கோடி நஷ்டஈடுகோரி வழக்குத் தொடரப் போவதாக ஜெயலலிதாவின் வக்கீல் ஜோதி, பேரவையைத் துவக்கியவருக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.
சேலத்தில் ஜெ.ஜெ.-சசிகலா பேரவை என்ற பெயரில் மாநில அளவில் ஒரு பேரவையைத் துவக்கிய சுப்ரமணியம்என்பவர், இதற்குத் தான்தான் தலைவர் என்றும் கூறிக் கொண்டார்.
ஆனால் இந்த பேரவைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்என்று ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கூறினர்.
இந்நிலையில் சுப்ரமணியக்கு வக்கீல் ஜோதி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில்கூறியிருப்பதாவது:
முதல்வரின் அனுமதியோ அல்லது சசிகலாவின் அனுமதியோ இல்லாமல் ஒரு பேரவையைத் துவக்கியதுஅதிர்ச்சியளிக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
முதல்வரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவரது அரசியல் எதிரிகள் உங்களைத் தூண்டி விட்டுள்ளனர்.எனவே, இது போன்ற காரியங்களில் நீஹ்கள் ஈடுபட்டுள்ளதாக ஏன் கருதக் கூடாது?
உங்களின் இந்த செயல் பெரிய மோசடியே ஆகும். அதிமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்களையும்,மக்களையும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறீர்கள். இச் செயல் தண்டனைக்குரிய குற்றம்.
உங்களது இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும்.எதிர்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.
இந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களில் மேற்கண்ட நிபந்தனையின் படி மன்னிப்புக் கடிதம் அளிக்காவிட்டால்,உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications