ஜம்மு கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி
ஜம்மு:
ஜம்முவில் உள்ள ரகுநாத் கோவிலில் இன்று (சனிக்கிழமை) காலை தீவிரவாதிகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் 4பாதுகாப்புப் படையினர், 2 தீவிரவாதிகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பரபரப்பான ரெசிடென்சி சாலையில் புகழ்பெற்ற ரகுநாத் கோவில் உள்ளது.
இன்று காலை சுமார் 10.30 மணிக்கு இந்தக் கோவிலுக்கு ஒரு வேனில் வந்த மூன்று தீவிரவாதிகள், கோவிலின்வாசலில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த இரண்டு பாதுகாப்புப் படையினரைச் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதையடுத்து, அங்கு வந்திருந்த பக்தர்கள்அனைவரும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
இச்சண்டையில் மேலும் இரண்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்போது மீதமிருந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர், தன்னுடன் கொண்டு வந்த கிரினேட் குண்டுகளை வீசினர்.இந்தக் குண்டு வீச்சுச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் குண்டடி பட்டு உயிரிழந்தனர்.
இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி ஒரு தீவிரவாதி தப்பியோடி விட்டான். மற்றொருவன் கோவிலுக்குள் ஒளிந்துகொண்டு, பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தான்.
இதையடுத்து கோவிலைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், ஒளிந்து கொண்டிருந்த தீவிரவாதியையும்சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தீவிரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications