இமாம் அலி குறித்து 2 கைதிகளிடம் தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இமாம் அலி இருக்கும் இடம் குறித்து விசாரிப்பதற்காக, மதுரை சிறையில் உள்ள இமாம் அலி தப்பியதற்கு உதவிய2 கைதிகளை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் காவல் நிலையம் அருகில் சமீபத்தில் போலீஸ் வேனை தாக்கி அல்-உம்மா தீவிரவாதிகளானஹைதர் அலி, இமாம் அலி இருவரையும் 6 பேர் சேர்ந்த கும்பல் மீட்டு சென்றது.

2 பேரில் ஹைதர் அலியை போலீசார் இரு தினங்களிலேயே கைது செய்தனர். மேலும் அவர்களுக்குஉதவியவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால் இமாம் அலியை இதுவரை பிடிக்க முடியவில்லை. இவனைப் பிடிப்பதற்காக சிறப்பு புலனாய்வு போலீசார்தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இமாம் அலிக்கு அடைக்கலம் கொடுத்து உதவி, தற்போது சிறையில் உள்ள ராமநாதபரத்தை சேர்ந்தசையது இப்ராகிம், மதுரையை சேர்ந்த யாசர் முபாரக் ஆகியோரை போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.

இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மதுரை நீதிமன்றத்தில் போலீசார்மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடாஜலபதி இதற்கு அனுமதியளித்தார்.

இதனால் இரு கைதிகளையும் போலீசார் காவலில் வைத்துக் கொண்டு, இமாம் அலி குறித்து விசாரித்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+