வெகு விரைவில் தமாகா இணையும்: காங். நம்பிக்கை
மதுரை:
தங்கள் கட்சியுடன் தமாகா எப்போது இணையும் என்பதுதான் இப்போதைய கேள்வியே தவிர, இணைப்பு உண்டா,இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
காங்கிரசுடன் தமாகவை இணைப்பது குறித்து திங்கள்கிழமை வாசனை சந்தித்து பேசினார் ரமேஷ் சென்னிதாலா.இணைப்பு குறித்து அவர் இன்று அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தங்கள் கட்சியுடன் தமாகா எப்போது இணையும் என்பதுதான் இப்போதைய கேள்வியே. இணைப்பு உண்டா,இல்லையா என்ற கேள்விக்கே இடம் இல்லை.
இணைப்புக் குறித்து வாசனுடன் பேசியது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. இனி எப்போது இணைவதுஎன்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து தன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச வேண்டும் என்று வாசன் கூறினார். நாங்கள் இந்ததேதிக்குள் இணைய வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை.
காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் திரும்பவும் கட்சியில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். அதே போல் தான் வாழப்பாடி, குமரி அனந்தன் ஆகியோர் காங்கிரஸில்இணைந்துள்ளனர்.
இதனால் தமிழக காங்கிரஸ் மேலும் வலுவடைந்துள்ளது. தமாகா, காங்கிரசுடன் இணைந்தால், தமாகாவை அதிமுகஉடைக்கும் என்று கூறுகிறார்கள். இது உண்மையல்ல.
காங்கிரசும், தமாகாவும் சகோதரக் கட்சிகள். உள்கட்சி விவகாரம் போன்ற இதில் எப்படி அதிமுக தலையிடும் என்றுரமேஷ் சென்னிதாலா கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications