இந்தியாவை அணு குண்டால் தாக்குவோம்: முஷாரப்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்க பிரதமர் வாஜ்பாய் மறுத்துவிட்டார்.

இஸ்லாமாபாத்தில் ஜெர்மன் இதழ் ஒன்றுக்கு முஷாரப் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருப்பதாக தகார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போர் ஏற்பட்டு நிலைமை மிக மோசமானால், கடைசியில் வேறு வழியே இல்லை என்றால், அணு ஆயுதத்தைஇந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் என்று அதில் முஷாரப் உளறியிருப்பதாகத்தெரிகிறது.

இது குறித்து இன்று சிங்கப்பூர் புறப்பட்ட பிரதமர் வாஜ்பாயிடம் விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது,

இது தொடர்பாக முழு விவரம் வரும் வரை நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.

இந்தியா மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் இந்தியா கொடுக்கும் பதில் அணு குண்டுத் தாக்குதலில்பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருந்து அழிக்கப்படும் என்று இந்திய ராணுவத் தளபதி பத்மநாபன்ஏற்கனவே கூறியிருப்பது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+