நடிகர் ராதாரவி மீது கல்வீச்சு: 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பேச்சாளரான நடிகர் ராதாரவி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராதாரவி கலந்துகொண்ட பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் சுதர்சனம், சோமசுந்தரம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராதாரவி மைக் முன் வந்து பேசியபோது, திடீரென சிலர் மேடையை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசார் விரைந்து வந்து கற்களை வீசித் தாக்கிய 8 பேரை கைது செய்தனர். அனைவரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications