கூத்தங்குளத்தில் குவியும் வெளிநாட்டு விருந்தாளிகள் !
கூத்தங்குளம்:
திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குளத்தில் உள்ள சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள்வந்து குவிந்து, சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
கூத்தங்குள பறவைகள் சரணாலயத்தில் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்துசெல்லும். நாள்தோறும் இடம் பெயர்ந்து நாடு நாடாகச் செல்லும் இந்தப் பறவைகள், கோடைக் காலத்தில்இந்தியாவிற்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போதும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் கூத்தங்குளம் சரணாலயத்தில் வந்துகுவிந்துள்ளன.
கடந்த ஆண்டு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப் படாததால் கூத்தங்குளம் ஏரி வறண்டுகிடந்ததால், அங்கு வந்த வெளிநாட்டுப் பறவைகள் ஒரே நாளில் இடத்தைக் காலி செய்து பறந்து விட்டன.
அதனால் இந்த முறை சுற்றுலாத் துறை அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு, ஏற்கனவே மணிமுத்தாறுஅணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டனர். இதனால் கூத்தங்குளம் ஏரி நிரம்பி அங்கு வரும் வெளிநாட்டுப்பறவைகளுக்கு சொர்க்கமாகக் காட்சியளிக்கிறது.
இதையடுத்து இந்த சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கஆரம்பித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பறவைகளைக் கண்டு மிகவும் மகிழ்ந்துபோயுள்ளனர்.
சைபீரியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பிளெமிங்கோ,கொமோரண்ட், க்ரே ஹெரோன், பர்பிள் ஹெரோன் உள்ளிட்ட பலவிதமான பறவைகளும் சுற்றுலாப் பயணிகளின்கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications