மத்திய அரசை மிரட்ட திமுகவுக்கு தைரியம் உண்டா? - அதிமுக கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் கேட்டுள்ள ரூ.3,000 கோடியை உடனடியாக ஒதுக்குமாறு மத்திய அரசை திமுக மிரட்ட வேண்டும் என்றுதமிழக நிதி அமைச்சர் பொன்னையன் இன்று (திங்கள்கிழமை) சட்டசபையில் கூறினார்.

மத்திய அரசின் கூட்டணியில் இருப்பதோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய அமைச்சர் பதவிகளையும் மத்தியில்திமுக வைத்துள்ளதால், தமிழகத்திற்காக இதை அவர்கள் கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்றும்பொன்னையன் கூறினார்.

அவ்வாறு தமிழகத்திற்கான நிதியை வாங்கிக் கொடுத்தால்தான் தமிழக மக்களின் அன்பை திமுக பெற முடியும்என்றும் கூறிய பொன்னையன், ஆந்திர முதல்வரும் மத்திய அரசின் கூட்டணியில் இருந்து கொண்டே தன் மாநிலநலனுக்காக எப்படியெல்லாம் மத்திய அரசை மிரட்டுகிறார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இதற்குப் பதிலளித்த சட்டசபை திமுக துணைத் தலைவரான துரைமுருகன், தமிழக அமைச்சர்களில் யாராவதுதன்னுடன் டெல்லி வந்தால் இந்த நிதிப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்களிடம் பேசத் தயார் என்று கூறினார்.

மேலும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் போராட எந்தக் காலத்திலும் திமுக தயங்கியதே இல்லைஎன்றும் துரைமுருகன் கூறினார்.

இதற்கிடையே பேசிய சட்டசபை திமுக தலைவர் அன்பழகன், தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதற்கு முந்தையதிமுக அரசுதான் காரணம் என்று கூறுவது சரியல்ல என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+