இந்திராவிடம் கருணாநிதி சரணடைந்து தப்பினார்: ஜெ.
சென்னை:
காவிரி நதி நீர் பிரச்சனையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர்பொன்னையனும் தொடர்புபடுத்தி பேசியதற்கு சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் த.மா.கா. எம்எல்ஏக்கள் கடும்எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இன்று முழுவதுமே அவை அமளி துமளியாகத் தான் நடந்தது. காலையில் திமுகவினருடன் மோதிய அதிமுகவினர்பின்னர் த.மா.கா., காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் மோதினர்.
நிதியமைச்சர் பொன்னையன் பேசுகையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில்தொடர்ந்த வழக்கு 1971ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது வாபஸ் வாங்கப்பட்டது.
தன் மீது போடப்பட்ட பூச்சி மருந்து ஊழல், கோதுமை ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க முயன்ற கருணாநிதிஅப்போதைய பிரதமராக இருந்து இந்திரா காந்தியுடன் கருணாநிதி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். பின்னர்இந்திரா காந்தியின் வலியுறுத்தால் காவிரி தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை வாபஸ்பெற்றார்.
இந்த வழக்கை நடுவர் மன்றத்துக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி மனு செய்தார் என்றுபொன்னையன் பேசிக் கொண்டே போனார்.
அப்போது த.மா.கா. தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் எழுந்து பொன்னையனின் பேச்சைக் கண்டித்தார்.இந்திரா காந்தி குறித்து பொன்னையன் தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார் என்று கூறிய அவர்,கருணாநிதி மீதான பூச்சி மருந்து ஊழல், கோதுமை ஊழல் ஆகிய வழக்குகள் 1976ம் ஆண்டில் தான் சி.பி.ஐயால்பதிவு செய்யப்பட்டன. இதனால், 1971ம் ஆண்டில் காவிரி வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றதற்கும் இந்திராகாந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, எனக்கு இந்திரா காந்தியின் மீது முழு மரியாதை உண்டு.ஆனால், அதற்காக வரலாற்றை யாரும் மாற்றி விட முடியாது. தண்டனைகளில் இருந்து தப்ப இந்திரா காந்தியிடம்கருணாநிதி சரணடைந்தது உண்மை.
தனது சுய நலத்துக்காக காவிரி வழக்கை வாபஸ் வாங்கியதன் மூலம் விவசாயிகளின் வாழ்வில்விளையாடிவிட்டார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.
தொடர்ந்து இந்திரா காந்தியை இந்த விவகாரத்தில் ஜெயலலிதா இணைத்துப் பேசியதற்கு காங்கிரஸ் மற்றும்த.மா.கா. உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications