இலங்கை: நாளை நிருபர்களைச் சந்திக்கிறார் பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

வவுனியா:

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச பத்திரிக்கை நிருபர்களை விடுதலைப்புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரன் நாளை (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார்.

இதையடுத்து உலகெங்கிலுமிருந்து 500க்கும் மேற்பட்ட பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் காமிராமேன்கள் வடஇலங்கையின் வன்னிப் பகுதியில் உள்ள கிளிநொச்சியை முற்றுகையிட ஆரம்பித்துள்ளனர்.

வெகு விரைவில் இலங்கை இனப் பிரச்சனைக்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ள சூழ்நிலையில்நிருபர்களைப் பிரபாகரன் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நடக்கவுள்ள இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்புதான் இலங்கையிலேயே மிகப் பெரியதாக இருக்கும் என்றுகருதப்படுகிறது.

ஆனாலும் கிளிநொச்சியில் தகவல் தொடர்பு வசதிகள் மிகவும் குறைவு என்பதால், பிரபாகரனின் பேட்டியைநேரடியாக ஒளிபரப்புவதற்காக உலகின் பெரிய தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்கள் அதிநவீனக்கருவிகளுடன் அங்கு குழுமியுள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நவம்பரில் மட்டும் உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவு கூறும் வகையில் தன்னுடையஉறுப்பினர்களைச் சந்தித்து வந்த பிரபாகரன், தற்போது சர்வதேச பத்திரிக்கை நிருபர்களையும் அதன்தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களையும்கூட சந்திக்கவுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளில் தன்னுடைய 17,000 வீரர்களை இழந்துள்ள பிரபாகரன் (47), "தமிழ் ஈழம்" என்றதன்னுடைய குறிக்கோளை விட்டுக் கொடுப்பாரா என்பதுதான் தற்போது பெரிய கேள்விக் குறியாக அனைத்துநிருபர்களிடமும் தொக்கி நிற்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம், அதை புலிகள் மீறியுள்ளதாக வந்த புகார், விரைவில்நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை, நேற்று திறக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை, வடஇலங்கையிலிருந்து கடந்த 1990ல் விரட்டப்பட்ட முஸ்லீம்கள், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைஅகதிகள்... என்று நீண்டு கொண்டே செல்லும் கேள்விகளின் பட்டியல் இப்போதே அனைத்து நிருபர்களின்மனத்திலும் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் உள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாகரனை நேரில் சந்திக்கப் போகும் ஆவலிலும் பல நிருபர்கள் நாளைக்காகக்காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+