தமிழக ஆளுநருக்கு தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநரான ராமமோகன் ராவுக்கு இன்று (சனிக்கிழமை) தொலைபேசி மூலம் தெலுங்குப் புத்தாண்டுவாழ்த்துக்கள் கூறினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியான ராமமோகன் ராவ் கடந்த ஜனவரி மாதம் தமிழகஆளுநராக நியமிக்கப்பட்டார்.
உலகம் முழுவதிலும் உள்ள தெலுங்கு மக்கள் இன்று தெலுங்குப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி இன்று காலை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு ஜெயலலிதா போன் செய்து, ராமமோகன்ராவைத் தொடர்பு கொண்டார்.
பின்னர் போனிலேயே அவருக்குத் தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்துக்களை ஜெயலலிதா கூறினார். ராமமோகன்ராவும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications