இணைப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும்: வாசன்
சென்னை:
காங்கிரசுடன் தமாகாவை இணைக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
கடந்த நான்கைந்து நாட்களாக டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறுதலைவர்களையும் சந்தித்து இணைப்பு குறித்துப் பேசிய வாசன், சென்னை திரும்பியதும் நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:
என்னை ராஜ்யசபா எம்.பியாகத் தேர்ந்தெடுக்க ஆதரவு அளித்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
சோனியாவைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் இணைப்பு குறித்தும் பேசினேன். காங்கிரஸ்கட்சியின் அகில இந்திய செயலாளர் ரமேஷ் சென்னிதாலாவுடனும் பேசினேன்.
ஆனால் இணைப்பு தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அது பின்னர் அறிவிக்கப்படும்.
ராஜிவ் காந்தி கொலை குறித்து விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரன் கூறிய கருத்து ஏற்புடையதல்ல.இந்தக் கொலைச் சம்பவத்தை யாரும் இன்னும் மறந்து விடவில்லை.
புலிகளுக்கு இந்தியாவில் தொடர்ந்து தடை விதிக்க வேண்டும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications