பிரபாகரனைப் பிடிக்கக் கோரும் தீர்மானம்: சட்டசபையில் நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜிவ் கொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குள்கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் இன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை எதிர்த்து வாக்களித்தது. திமுகநடுநிலை வகித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்தது.

இந்தத் தீர்மானத்தை அதிமுக தவிர, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிஎம்.எல்.ஏக்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

இன்று காலை அவை கூடியதும் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு வசதியாக கேள்வி நேரம் ரத்துசெய்யப்படுவதாக சபாநாயர் காளிமுத்து அறிவித்தார்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா அரசின் சார்பில் ஒரு தனி தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையில் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக்கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இதுவரை தலைமறைவாக இருந்து வந்த பிரபாகரன் மீண்டும் வெளியில் தலைகாட்டியுள்ளார். சர்வதேசசெய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ள பேச்சுக்கள் மிகவும் கண்டித்தக்கவை.

ராஜிவ் காந்தியின் கொலைக்குப் பின் தமிழக மக்களிடையே புலிகள் மீது இருந்து வந்த அனுதாபம்மறைந்துவிட்டது. இந்தத் தீர்மானம் தமிழக மக்களின் மன நிலையைத் தான் பிரதிபலிக்கிறது.

பிரபாகரனைப் பிடிக்க இலங்கை அரசுடன் தூதரகரீதியிலான, சர்வதேச சட்டரீதியிலான முயற்சிகளை எடுக்கவேண்டும்.

அவரைப் பிடிக்க இலங்கை அரசால் முடியாவிட்டால், அந்த அரசின் அனுமதியோடு இந்திய ராணுவத்தை அங்கேஅனுப்பி பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும்.

ஒசாமா பின் லேடனைப் பிடிக்க அமெரிக்க மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளைப் போன்ற ஒரு திட்டத்தைவகுத்து பிரபாகரனைப் பிடிக்க வேண்டும்.

இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, இறையாண்மையைப் பாதுகாக்கவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்.

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை ஜெலலிதா வாசித்து முடித்தவுடன் இதன்மீது விவாதம் நடந்தது. பின்னர் குரல் ஓட்டு மூலம் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+