வருகின்றன மகளிர் நீதிமன்றங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெண்கள் பிரச்சினைகள், வழக்குகள் தொடர்பானவற்றை விசாரிப்பதற்காக சென்னை மற்றும் கோவையில் விரைவில் மகளிர்நீதிமன்றங்கள் துவக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், சென்னை மற்றும்கோவையில் பெண்கள் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் தெவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் இந்தஇரு நகரங்களிலும் தலா ஒரு மகளிர் நீதிமன்றம் அமைக்கப்படும்.
பெண்கள் தொடர்பான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். பெண்களுக்காகவே அமைக்கப்படும் நீதிமன்றங்கள் என்பதால்பெண்கள் தொடர்பான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications