For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெசன்ட் நகரில் 1 லட்சம் நகை, கார் கொள்ளை: குற்றங்கள் இங்கே கம்மி என்கிறார் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் குற்றங்கள் குறைவாகவே நடப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால், சென்னையில்தொடர்ந்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் இன்னும் நின்ற பாடு இல்லை. நேற்று நள்ளிரவிலும் பெசன்ட் நகரில்உள்ள ஒரு வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீதர். கோடைகாலத்தில் இவர் மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம்.

நேற்று (புதன்கிழமை) இரவும் வழக்கம்போல் டாக்டர் ஸ்ரீதர் வீட்டைப் பூட்டிவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்றுதூங்கினார்.

பின்னர் இன்று அதிகாலை எழுந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு,அதிலிருந்த தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பெசன்ட் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம்என்று தெரிகிறது.

இதற்கிடையே பெசன்ட் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரும்திருடிச் செல்லப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்த ஒருவர் தனது காரை உறவினரின் வீட்டின் முன்நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அவரது டிரைவர் இரவுக் காட்சி சினிமா பார்க்கப் போய்விட்டார். அவர் திரும்பிவந்தபோது காரைக் காணவில்லை.

இதே பகுதியில் தான் ஸ்டேட் பாங்கிலும் இரு வாரங்களுக்கு முன் கொள்ளை நடந்தது. அதைத் தடுக்க முயன்றவங்கி ஊழியர் விஸ்வநாதன் குத்திக் கொல்லப்பட்டார்.

தொடர் கொள்ளைகளால் நொந்து போயுள்ள சென்னை போலீசார், குழம்பிப் போன நிலையில்கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்களுக்கு அதிகாரி தூண்டுதலா?:

சமீபத்தில் அரசால் தண்ணி இல்லா காட்டுக்கு தூக்கி அடிக்கப்பட்ட ஒரு உயர் போலீஸ் அதிகாரி தான் தனது பழையநண்பர்களான தாதாக்களைத் தூண்டிவிட்டு சென்னையில் கொள்ளைகள் நடத்தி வருவதாக சந்தேகம்எழுந்துள்ளது. இந்தக் கோணத்தில் உளவுப் பிரிவு ஆராய ஆரம்பித்துள்ளது.

சென்னை காவல்துறையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தபோது ஒரு அடிதடி தாதா உதவியுடன் மோசடிகளில்அவர் செயல்பட்டார். இதனால் தான் தூக்கி அடிக்கப்பட்டார். மேலும் ஒரு ஹோட்டல் முதலாளி வழக்கில் பலகோடியை சுருட்டியவர் இந்த அதிகாரி. சென்னையில் மாட்டுப் பண்ணை, கேரளாவில் கோடிக்கணக்கானமதிப்புள்ள நிலம் ஆகியவை இந்த அதிகாரிக்குச் சொந்தமானவை.

இவரது தூண்டுதலால் தான் கொள்ளைகள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையில் கொள்ளை குறைவுதான் - ஜெ.:

இதற்கிடையே இந்தத் தொடர் கொள்ளைகள் குறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவிளக்கமளித்தார்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநகரங்களான டெல்லி, மும்பை மற்றும் கல்கத்தா ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, சென்னையில் மிகமிகக் குறைவான அளவிலேயே கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன என்றார்அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X