அச்சிறுப்பாக்கத்தில் பாமகவுக்கு திமுக ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அச்சிறுப்பாக்கம் இடைத் தேர்தலில் பாமகவின் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முன்பே பாமக நின்று, வென்ற தொகுதிதான் அச்சிறுப்பாக்கம். அங்கு நிறுத்தப்படவுள்ள தங்களுடையவேட்பாளரை ஆதரிக்கும்படி அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதாகவும்ராமதாஸ் கூறியிருந்தார்.
இதையடுத்து அச்சிறுப்பாக்கத்தில் நிறுத்தப்படும் பாமக வேட்பாளருக்கு திமுக ஆதரவளிக்கும் என்று நானும்அவருக்குப் பதில் கடிதம் எழுதியுள்ளேன்.
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினர் அராஜகம் செய்து வெற்றி பெற்றதைப் போல, இந்தசட்டசபை இடைத் தேர்தலிலும் வன்முறை நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications