"சென்னை கொள்ளைகள் உள்ளூர் திருடர்களின் கைவரிசைதான்": டி.ஜி.பி.
சென்னை:
உள்ளூரைச் சேர்ந்த சில திருடர்கள்தான் சென்னையில் நடந்து வரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் இன்று கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் நெய்ல்வால் கூறியதாவது:
சென்னையில் நடந்து வரும் கொள்ளைகளுக்கு மும்பை தாதாக்கள்தான் காரணம் என்று கூறமுடியாது. மும்பைரவுகளின் ஊடுருவல் எல்லாம் இங்கு கிடையாது.
இவை எல்லாம் உள்ளூரைச் சேர்ந்த திருடர்களின் கைவரிசைதான். அவர்களே பல குழுக்களாகப் பிரிந்துவீடுகளிலும் கடைகளிலும் கொள்ளையடித்து வருகின்றனர்.
ஒரு சிறு "க்ளூ" கிடைத்தால் போதும். இந்தக் கொள்ளையர்கள் அனைவரையும் மடக்கிப் பிடித்து விடுவோம்.விரைவில் கொள்ளையர்களைக் கைது செய்வோம்.
கோடை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் மக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால் அவர்கள் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் நெய்ல்வால்.












Click it and Unblock the Notifications