பரிதி விவகாரம்: சட்டசபையை புறக்கணித்தது திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி சட்டசபைக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக்கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் முழுவதும் சட்டசபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி குறித்து சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கேவலமாகப்பேசியதையடுத்து, பரிதியும் சட்டசபையில் வளர்மதியைத் திட்டினார்.

இதையடுத்து, அவரை அவையின் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் காளிமுத்துஉத்தரவிட்டார். மற்ற திமுக எம்.எல்.ஏக்களும் இச்சம்பவத்தைக் கண்டித்து அன்று வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுகஎம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.

பரிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று மட்டும் சட்டசபைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகஇக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இன்று ஒருநாள் மட்டும் சட்டசபை நடவடிக்கைகளை திமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு செய்தனர்.

பெரும்பான்மை இடங்களை வைத்திருக்கிறோம் என்கிற மிதப்பில் இருக்கும் அதிமுக, எதிர்க் கட்சிகளுக்குமுறையான பேச்சுரிமையை அளிக்கவில்லை என்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+