பிரதமர் இல்லத்தில் அவசரக் கூட்டம்
டெல்லி:
குஜராத் பிரச்சனை தொடர்பாக எதிர்க் கட்சிகள் நாளை கொண்டு வரும் தீர்மானத்தையும் அதைத் தொடர்ந்துநடக்கும் ஓட்டெடுப்பையும் எதிர்கொள்வது குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின்கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
இன்று இரவு பிரதமரின் இல்லத்தில் இக் கூட்டம் நடக்கிறது.
இக் கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்து அரசுக்குபெரும் நெருக்கடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பாஸ்வான்.
இவர் தனது ராஜினாமாவுக்கு குஜராத்தைக் காரணமாகக் காட்டினாலும் கூட உண்மையில் உத்தரப் பிரதேசத்தில்மாயாவதியுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்து கொண்டுள்ளதை எதிர்த்துத் தான் அவர் இந்த நடவடிக்கையைஎடுத்துள்ளார்.
மாயாவதியை வளர்த்துவிடுவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் தனது முக்கியத்துவத்தை குறைக்க பா.ஜ.க.முயல்வதாக அவர் நினைக்கிறார். மேலும் இக் கூட்டணி குறித்து அவரிடம் ஒரு மரியாதைக்குக் கூட பா.ஜ.க.ஆலோசிக்கவில்லை.
இது தவிர சில மாதங்களுக்கு முன் தான் இவரிடம் இருந்த செல்வாக்கு மிகுந்த தொலைத் தொடர்புத்துறையைவாஜ்பாய் பறித்தார். இவருக்கு நிலக்கரித்துறை வழங்கப்பட்டது.
இதனால் கடுப்பில் இருந்த பாஸ்வான் மத்திய அரசு நெருக்கடியில் இருக்கும்போது காலை வாரிவிட்டுள்ளார்.
இந் நிலையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று இரவு பிரதமர் இல்லத்தில்நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் கூட்டணிக் கட்சிகளிடம் அவர்களின் நிலை குறித்து வாஜ்பாய் விவரமாகக்கேட்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications