சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சனை தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டதையடுத்து, திமுகஎம்.எல்.ஏக்கள் அனைவரும் அவைக் காவலர்களால் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.

காவிரி விவகாரத்தில் முந்தைய திமுக அரசு தவறான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்ததால் அப்பிரச்சனைக்குஇன்னும் தீர்வு காணவே முடியவில்லை என்று அதிமுக குற்றம் சாட்டியது.

கடந்த 1968ம் ஆண்டு அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, காவேரிஆற்றின் குறுக்கே ஹேமாவதி அணையைக் கட்டுவதற்கு அனுமதி அளித்ததால்தான் காவிரிப் பிரச்சனை மிகவும்தீவிரமாகியது என்று தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் காவிரிப் விவகாரம் தொடர்பாக கடந்த 1971ம் ஆண்டு கருணாநிதி கொண்டு வந்த ஒப்பந்தம் 1974க்குப்பிறகு செல்லாமல் போய்விட்டதால்தான் தற்போது காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் துன்பப்படுவதாகவும்பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

இதைக் கடுமையாக எதிர்த்து திமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர். எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்திமுக மீது அனாவசியமாகக் குற்றம் சாட்டுவதாக அவர்கள் கூறினர்.

மேலும் காவிரி விவகாரத்தில் அதிமுகவின் பல "சறுக்கல்களையும்" திமுக எம்.எல்.ஏக்கள் சுட்டிக் காட்டஆரம்பித்தனர்.

இதையடுத்து இரு கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் காரசாரமாகப் பேசிக் கொண்டனர்.

சபாநாயகர் காளிமுத்து எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கோஷம்போட்டுக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அவைக் காவலர்களை விட்டு திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றஅவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களை அவைக் காவர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து, அவர்களைவெளியேற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+