வன்முறையைத் தூண்டும் "ஓ...போடு" பாடல்: மதுரை அருகே ஒருவர் கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தில் பெண்ணைப் பார்த்து "ஓ... போடு" பாட்டைப் பாடியதால் ஏற்பட்டமோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

குலமங்கலத்தைச் சேர்ந்த சோனைத் தேவர் என்பவரது உறவுப் பெண்ணைப் பார்த்து அதே பகுதியைச் சேர்ந்த சிலர்"ஓ... போடு" பாடலைப் பாடி கேலி செய்தனர்.

இதை சோனைத் தேவர் தட்டிக் கேட்டதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரமான மோதல்ஏற்பட்டது.

இந்த இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலின்போது தகராறு ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.

இதனால் தற்போது அங்கு மோதல் பயங்கரமான வெடித்தது. இதில் சோனைத் தேவர் அடித்து படுகொலைசெய்யப்பட்டார்.

இந்தக் கொலையையடுத்து, குலமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு மேலும் வன்முறைபரவாமலிருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே "ஓ... போடு" பாடலைப் பாடி சில பெண்களைபாமக தொண்டர்கள் கேலி செய்ததால் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+