மிக்-21 விமானம் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி
ஜலந்தர்:
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒருகட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் தப்பியபோதிலும்கட்டடத்திலிருந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று காலை 9.37 மணிக்கு வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்த மிக்-21 விமானம்ஆதாம்பூரிலிருந்து கிளம்பிச் சென்றது.
ஆனால் திடீரென்று அந்த விமானத்தின் என்ஜினும் எரிபொருள் டாங்கியும் கழன்று விழ ஆரம்பித்தன. இதைப்பார்த்ததும் விமானத்திலிருந்து நாயக் என்ற பைலட்டும், துணை பைலட்டும் உடனடியாக பாராசூட் மூலம் தப்பிகீழே குதித்து விட்டனர்.
இதற்குள் விமானத்தின் எரிபொருள் டாங்கி வெடித்ததால் தீப்பிடித்துக் கொண்ட விமானம், ஜலந்தரில் உள்ளபாங்க் ஆப் ராஜஸ்தான் அமைந்திருந்த கட்டடத்தில் காலை 10.10 மணிக்கு விழுந்து சிதறியது. இதையடுத்துஅந்தக் கட்டடத்திலும் பயங்கரமாகத் தீப்பிடித்துக் கொண்டது.
இச்சம்பவத்தில் கட்டடத்திலிருந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயங்களுடன்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் பல உடல்கள் கிடக்கும் என்று தெரிகிறது.
விமானம் வந்து விழுந்து சிதறிய வேகத்தில் அருகிலுள்ள வேறு பல கட்டடங்களிலும் கூட தீ விபத்து ஏற்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பைலட்டும், துணை பைலட்டும் கூட காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மிக்-21 பயிற்சிகள் நிறுத்தி வைப்பு:
இதற்கிடையே இன்று காலை மிக்-21 விமானம் நொறுங்கி விழுந்ததையடுத்து, இந்த ரக விமானங்களைப்பயன்படுத்தி விமானப்படை விமானிகள் பயிற்சி பெற்றுக் கொள்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை முடியும்வரை இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபடக் கூடாது என்றுவிமானப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications