காஞ்சி: 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
காஞ்சிபுரம்:
கணவரின் முதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 2 குழந்தைகளுக்குப் பூச்சி மருந்தைக் கொடுத்து தானும்குடித்துத் தற்கொலை செய்து கொண்டார் 2வது மனைவி.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் ஒரு விவசாயி. 40 வயதாகும்கருணாகரனுக்கும், ரமணி என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கருணாகரன்.இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் குடும்பம்நடத்தினார் கருணாகரன்.
இரண்டாவது மனைவியையும் அதே வீட்டிலேயே வைத்திருந்ததால் அடிக்கடி லட்சுமியும் ரமணியும் சண்டைபோடுவது வழக்கமாம். இதனால் நிம்மதி இழந்த நிலையில் இருப்பாராம் கருணாகரன்.
இந்நிலையில், பள்ளி விடுமுறைக்காக மகள்கள் ரஞ்சிதா மற்றும் ராணி ஆகியோரை தனது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்ட லட்சுமி, வீட்டில் இன்னொரு மகள் ராதா மற்றும் மகன் பூவரசன் ஆகியோருடன் இருந்தார்.
வீட்டில் ரமணியும், லட்சுமியும் மட்டும் இருந்தபோது ஏதோ காரணத்திற்காக வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. அதுகைகலப்பாக மாறும் முன்பு வீட்டுக்கு வந்து விட்ட கருணாகரன் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு வெளியேசென்றுள்ளார்.
அவர் போன பின் லட்சுமியுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார் ரமணி. இதனால் மனம் உடைந்த லட்சுமி,வீட்டிலிருந்த தனது மகளுக்கும், மகனுக்கும் பூச்சி மருந்தை கரைத்துக் கொடுத்தார். பின்னர் தானும் அதைக்குடித்தார்.
பயந்து போன ரமணி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து 3பேரையும் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மூவருமே சிகிச்சைபலனளிக்காமல் இறந்தனர்.
கருணாகரன் மற்றும் ரமணியிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications