மக்களவை சபாநாயகராகிறார் மனோகர் ஜோஷி
டெல்லி:
முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சிவசேனை கட்சியைச் சேர்ந்த மனோகர்ஜோஷி லோக்சபாவின் அடுத்த சபாநாயகராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள லோக்சபா சபாநாயகருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்ஜோஷி நிறுத்தப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் எதிர்க் கட்சித்தலைவர்கள் ஆகியோருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் நேற்று தனித்தனியாகஆலோசனை நடத்திய பிறகே ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க் கட்சிகள் உள்பட இதுவரை யாரும் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நாளைபகலுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிகிறது.
வேறு யாரும் இப்பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லையென்றால் ஜோஷியே லோக்சபாவின்சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பெட்ரோலியத்துறை அமைச்சரான ராம் நாயக், சுற்றுலாத்துறை அமைச்சரான ஜக்மோகன் மற்றும் பாஜகவின்செய்தித் தொடர்பாளரான விஜய் குமார் மல்ஹோத்ரா ஆகியோரின் பெயர்கள் கடந்த ஒரு வார காலமாக இந்தசபாநாயகர் பதவிக்கு அடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications