திருச்சியில் தோன்றிய திடீர் 13 அடி பள்ளத்தால் பரபரப்பு
திருச்சி:
திருச்சி மலைக்கோட்டை அருகே நேற்று திடீரென்று 13 அடி ஆழம் 3 அடி அகலத்திற்கு ஒரு பள்ளம் தோன்றிமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கர் என்பவர் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள கீழ ஆண்டார் கோவில் தெருவில் கடை வைத்து நடத்திவருகிறார். இவர் தனது மொபெட்டை எப்போதும் கடைக்கு முன்னால் நிறுத்தியிருப்பார்.
அவ்வாறு நிறுத்தி விட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடையின் முன் திடீரென்று ஒருபள்ளம் தோன்றி மொபெட் தானாகக் கீழிறங்குவதை கண்டவுடன், மொபெட்டை மீட்க சங்கர் ஓடி வந்தார்.
அங்கிருந்த பொதுமக்களும் மொபெட்டை மீட்க முயன்றனர். ஆனால் அந்த மொபெட் அந்தப் பள்ளத்திற்குள்ளேபுதைந்து விட்டது.
இதையடுத்து உடனடியாக போலீசுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவஇடத்துக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் பள்ளத்துக்குள் மறைந்த மொபெட்மீட்கப்பட்டது.
சுமார் 13 அடி ஆழத்தில் திடீரென்று உருவான இந்தப் பள்ளத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.அந்தப் பள்ளத்தினுள் பழங்கால செங்கற்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் திருச்சியைஆண்ட மன்னர்கள் ஏற்படுத்திய சுரங்கப்பாதைதான் இந்தப் பள்ளம் என்றும் கருதப்படுகிறது.
இந்த பள்ளம் குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம்அதிகமுள்ள பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பு கருதி பள்ளம் உடனடியாக மூடப்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications
