திமுக, மதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்றுவேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதே போல சைதாப்பேட்டை தொகுதிக்கான மதிமுக வேட்பாளரும்வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
சைதாப்பேட்டையில திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் இந்தத் தொகுதிக்கான தேர்தல் அதிகாரி ஜெயேந்திர சேவியரிடம் வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார்.
அவருடன் தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் க.கிட்டு, பரிதி இளம் வழுதி, பாட்டாளி மக்கள் கட்சியினர்உள்பட ஏராளமானோர் சென்றனர்.
மா.சுப்பிரமணியத்துக்கு மாற்று வேட்பாளராக துரை என்பவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அதே போல வாணியம்பாடி திமுக வேட்பாளாரான இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக திமுக சார்பில் இஜாஸ் அகமத் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
மதிமுக வேட்பாளர்:
அதே போல சைதாப்பேட்டை தொகுதிக்கான மதிமுக வேட்பாளர் பா.சுப்பிரமணியனும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் ஏராளமான மதிமுக தொண்டர்களும், பா.ஜ.கவினரும் வந்திருந்தனர்.
இந் நிலையில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்நந்தகோபால் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்து தனக்கு ஆதரவுகோரினார். அவரை ஆதரிப்பதாக நல்லகண்ணு உறுதியளித்தார்.
அதே போல அச்சிறுப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்எல்லப்பனும் தனது கட்சியின் தலைவர் நல்லகண்ணுவை சென்னையில் சந்தித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications