ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்: கூட்டாளிகளை விரட்டி பிடித்த பொது மக்கள்
சென்னை:
சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியில் பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்ப முயன்ற ரவுடியை போலீஸ்இன்ஸ்பெக்டர் சுட்டுப் பிடித்தார். ரவுடியுடன் வந்த 3 கூட்டாளிகளை அப்பகுதி பொதுமக்களே விரட்டிப் பிடித்தனர்.
திரைப்படங்களில் வருவது போன்ற மிகத் திரில்லான காட்சிகள் நிறைந்த சம்பவமாக இது இருந்ததால் மதுரவாயல் பகுதியில் சிலமணி நேரங்களுக்கு பரபரப்பு நிலவியது.
தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவன் ரவுடி வாசுதேவன். இவனது நண்பர்கள் மாயாண்டி, பாஸ்கர் மற்றும் பாக்கியராஜ். இவர்கள்நான்கு பேரும் டாடா சுமோ காரில் மதுரவாயல் பகுதியில் உள்ள வனிதா என்பவரின் வீட்டுக்குச் சென்றனர்.
வனிதாவின் மருமகனை ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வாசுதேவன் கும்பல் தாம்பரத்தில் வைத்துக் கொலை செய்தது.இதையடுத்து தாம்பரத்திலிருந்து தனது மகளுடன் மதுரவாயல் வந்து விட்ட வனிதா அங்கு வசித்து வருகிறார்.
வலுக்கட்டாயமாக வனிதாவின் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் வனிதாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். வனிதா கொடுக்கமறுத்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த வாசு கும்பல் தங்களிடமிருந்த அரிவாள்களால் வனிதாவை வெட்டினர்.
அவர் உதவி கேட்டு குரல் எழுப்பவே பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்த ரவுடிக் கும்பல்அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால் பொதுமக்கள் அவர்களை ஓட ஓட விரட்டி 3 பேரை பிடித்து விட்டனர்.
வாசு மட்டும் தப்பி விட்டான். இதற்கிடையே ரவுடிகள் குறித்து மதுரவாயல் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்துமதுரவாயல் போலீஸார் விரைந்து வந்தனர்.
தப்பியோடிய ரவுடி வாசுதேவன் தாம்பரம் அருகே உள்ள குரோம்பேட்டைக்கு சென்று விட்டான். அங்கு ஒரு ஆட்டோ டிரைவரைஅடித்து விட்டு ஆட்டோவைப் பறித்துக் கொண்டான். பின்னர் மாலை 4 மணியளவில் மீண்டும் வனிதாவின் வீட்டுக்கு வந்தான்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தணிகைவேல் தலைமையிலான போலீஸார் அங்கு இருந்தனர். ரவுடியைப் பார்த்தும்அவனைப் பிடிக்க போலீஸார் முயன்றனர். ஆனால் அவர்களை தன்னிடம் இருந்த அரிவாளால் வெட்ட முயன்றான் வாசுதேவன்.
இதில் தணிகைவேல் மற்றும் கான்ஸ்டபிள் கென்னடி ஆகியோருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தணிகைவேல்துப்பாக்கியால் வாசு சுட்டார். இதில் வாசுவின் வலது முழங்கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதனால் ஓட முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தான் அவன். இன்னொரு துப்பாக்கிக் குண்டு ஆட்டோ கண்ணாடியில்பட்டது.
சுருண்டு விழுந்த வாசு பின்னர் போலீஸாரால் பிடிக்கப்பட்டான். பரபரப்பான இந்தச் சம்பவம் நடந்த இடத்தை செங்கை கிழக்குமாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் நேரில் பார்வையிட்டார்.
துணிச்சலுடன் ரவுடிகளைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்களைப் பாராட்டினார். ஈரோட்டில் நடந்த கொலை சம்பவத்திலும்வாசுவுக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவனை போலீஸார் தேடி வந்ததாகவும் தெரிவித்தார்.
வாசு மற்றும் அவனது கும்பல் மீது கொலை முயற்சி வழக்கும், வாசு மீது ஆட்டோ திருடியதாக ஒரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications