ஷார்ஜாவில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
ஷார்ஜா:
ஷார்ஜாவில் தமிழ்ப் புத்தாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில்நடைபெறும் அனைத்து விழாக்களையும் இவர்களும் அங்கே கொண்டாடுவது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டும் அவர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
ஷார்ஜா தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடந்த கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இந்த விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னையில் உள்ள சிவானந்த சரஸ்வதி ஆசிரமத்தின் நிர்வாகியான எஸ். ராஜாராமை ஷார்ஜா தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் இவ்விழாவின்போது பாராட்டிச் சிறப்பித்தது.
இந்தப் பாராட்டுக்களையும், கெளரவத்தையும் அளித்த ஷார்ஜா தமிழர்களுக்கு ராஜாராம் நன்றி கூறினார்.
கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும், வயது முதிர்ந்த பெற்றோர்களை இன்றைய இளைஞர்கள் கவனித்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆசிரமத்தின் செயல் நிர்வாகியான லட்சுமி ராஜாராம் எடுத்துக் கூறினார்.
ஷார்ஜாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியான பொன்னுச்சாமி, அங்குள்ள இந்திய சங்கத்தின் துணைத்தலைவரான கமருதீன் ஹாஜி மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மானேஜரான ஷியாம் சுந்தர் ஆகியோர்இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கினர்.
ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டுவிழாவின்போது வலியுறுத்தப்பட்டது.
விழாவின் இறுதியில் சிறுவர்-சிறுமியர் கலந்து கொண்ட வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அரபுநாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இவ்விழாவிற்கு வந்து மகிழ்ந்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications