லாரிகள், 100 டிவிக்கள் திருடிய கும்பல் கைது
சென்னை:
சென்னை-பெங்களூர் சாலையில் டிரைவர்களை மிரட்டி லாரிகளைக் கடத்திச் சென்று விற்று சாப்பிட்டு வந்த கும்பலை போலீஸார்கூண்டோடு கைது செய்தனர்.
10 பேர் கொண்ட இக்கும்பல் 100 டிவிக்கள் வரை திருடியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
சென்னை-பெங்களூர் சாலையில் அடிக்கடி லாரிகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தக்கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இந்தப் படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் காஞ்சிபுரம் அருகே காடு ஒன்றில் பதுங்கியிருந்த ஒரு கும்பல் பிடிபட்டது.
இந்தக் கும்பலை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பெங்களூர் சாலையில் லாரிகளைக் கடத்தித் திருடிவந்தது இக்கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.
டாடா சியாரா கார் மூலம் இவர்கள் லாரிகளை மடக்கி நிறுத்துவர். பின்னர் கத்தி முனையில் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்று விடுவார்கள். பின்னர் போலி ஆர்.சி. புக் தயாரித்து, நம்பர் பிளேட்டை மாற்றி அதை விற்றுவிடுவர்.
இக்கும்பலிடமிருந்து 2 லாரிகள், ஒரு டாடா சியாரா கார், 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. இதுதவிர இக்கும்பல் திருடிய41 கலர் டிவிக்களும் மீட்கப்பட்டன. வீடுகளிலிருந்தும், கடைகளில் இருந்தும் இந்த டிவிகளை இவர்கள் திருடியுள்ளனர்.
மொத்தம் 100 டிவி வரை இவர்கள் திருடியுள்ளதாகத் தெரிகிறது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications