சேலம் அரசு தொட்டில் செஞ்சுரி போட்டு சாதனை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கடந்த ஓராண்டில் சேலத்தில் உள்ள அரசுத் தொட்டிலில் மட்டும் 100 குழந்தைகள் வரை போடப்பட்டுள்ளன.

பெண் சிசுக் கொலையில் முன்னோடி வகிக்கும் மாவட்டம் சேலம். பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு கள்ளிப்பால்கொடுத்தும், நெல்லை பிஞ்சிகளின் வாயில் போட்டும், ஈரத்துணியால் மூச்சை அடைத்தும் கொடூரமாக கொன்றுசாக்கடையில் பேப்பரை தூக்கிப் போடுவது போல் போட்டு விடுவர்.

இதைத் தடுப்பதற்காக பல முயற்சிகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டன. 1992ம் ஆண்டு அரசுத் தொட்டில் குழந்தைதிட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. மேலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. எந்த நேரமும் பெண்சிசுக் கொலை நடந்தால் தெரிவிக்க கோரி 402000 என்ற எண்ணும் கொடுக்கப்பட்டது.

இதனால் பெண் சிசுக்களை வைத்துக் கொள்ளவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் தவித்த பெற்றோர்,அவர்களை அரசு தொட்டிலில் சேர்க்க முனைந்தனர். இதனால் பெண் சிசுக்களின் இறப்பு விகிதம் குறைந்துதொட்டில் குழந்தைகளின் சேர்ப்பு விகிதம் அதிகமானது. சென்ற வருடம் மே மாதம் தொடங்கி இந்த வருடம் மேமாதம் முடிவதற்குள் 100 குழந்தைகள் சேர்ந்து விட்டனர்.

நேற்று செஞ்சுரி போட்ட அந்த சிசுவையும் முதலில் கொல்வதற்குத்தான் அதன் பெற்றோர் திட்டமிட்டிருந்தனர்.ஆனால் சிசுவின் தாய்க்கு பிரசவம் பார்த்த இடத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தை பற்றி கூறவே புரிந்து கொண்டபெற்றோர், அரசு தொட்டிலில் குழந்தையைக் கொண்டு சேர்த்தனர். இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர்கூறியதாவது:

பெண சிசுக் கொலைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண் சிசுக்கொலைகள்குறைந்து வருகின்றன. தொட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் எட்டு பெண் சிசுக்களும், மே மாதத்தில் ஒரே நாளில் ஐந்து பெண்சிசுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

ஐ.எம்.ஆர் கணக்குப்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் பெண் சிசு இறப்பு விகிதம்108 ஆக இருந்தது. தற்போது 65ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இது போல் பெண் சிசுக் கொலை விகிதம் மூன்று ஆண்டுகளுக்கு முன் 12 ஒன்றியங்களில் 100க்கும் மேல் இருந்தது.தற்போது கொளத்தூர் ஒன்றியத்தில் மட்டும் தான் 100க்கு மேல் உள்ளது. பெண் சிசு இறப்பு விகிதம் 164ஆகஇருந்த இடைப்பாடி ஒன்றியத்தில் 36ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பெண் சிசுக் கொலைகளுக்கு காரணம் குடும்பக் கட்டுப்பாடு செய்யாதது தான். சேலம் மாவட்டத்தில் 2001ஆம்ஆண்டு சென்னைக்கு அடுத்தபடியாக 27,875 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்தனர் என்று சேலம் மாவட்டகலெக்டர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+