ஊட்டி மலை ரயிலுக்கு டீசல் என்ஜின்!
மேட்டுப்பாளையம்:
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி வரை செல்லும் மலை ரயிலின்என்ஜின் மாற்றப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளாக இருந்து வந்த நீராவி என்ஜின் மாற்றப்பட்டு தற்போது டீசல்என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஊட்டிக்குச் செல்வோர் மலைரயில் மூலம் செல்வதையே பெரிதும் விரும்புவர். மலையின் அழகை ரசிக்கவும்,இயற்கை அன்னையின் கதகதப்பை அருகில் சென்று பார்க்கவும் ரயில் பயணம்தான் சரியானது, பொருத்தமானதுஎன்பதே இதற்குக் காரணம்.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டிக்கு மலை ரயில் விடப்பட்டது. வெள்ளையர்களால் விடப்பட்ட அந்தரயில் போக்குவரத்து இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகிறது.
வெள்ளையர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் நீராவி என்ஜினால் தான் இதுவரை இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் நீராவி என்ஜினை இயக்குவதால் அதிக பொருட்செலவு ஆவதால் அதை தவிர்க்க, நீராவிஎன்ஜினில் சில மாற்றங்கள் செய்து அதை டீசல் மூலம் இயக்க ஆய்வு நடந்தது.
அந்த ஆய்வு முடிந்து தற்போது டீசல் போட்டு ரயிலை இயக்கும் விதத்தில் நீராவி என்ஜினில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (புதன்கிழமை) முதல் இந்த புதிய டீசல் என்ஜின் மூலம் மலை ரயில்இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications