பெண் டாக்டர் கொலை: 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் பிரபல பெண் டாக்டரைக் கொன்ற சம்பவத்தில் 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி. நகரில் பிரபல சித்த மருத்துவர் மலர்க்கொடி செவ்வாய்க்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார்.அவரது வீட்டிலிருந்து நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கொலையாளிகளைத்தனிப்படைப் போலீசார் தேடி வந்தனர்.
கொலை செய்யப்பட்ட டாக்டர் மலர்க் கொடி பிணமாகக் கிடந்த அறையில் கொலையாளிகளில் ஒருவனுடையசட்டையைக் கைப்பற்றிய போலீசார் அதை வைத்துக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அழகிரிசாமி மற்றும் முருகன், திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளத்தைச் சேர்ந்த கோபி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய நான்குபேரைப் போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளிகள் அனைவரும் கட்டடத் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் கொலை நடந்த வீட்டிலேயேதங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய பூர்வீக நகைகளை டாக்டர் ஆனந்தகுமார் விற்று பணத்தை ரொக்கமாக வீட்டில் வைத்திருந்ததைத்தெரிந்து கொண்ட குற்றவாளிகள், அப்பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.
அந்த முயற்சியின் போது தான் டாக்டர் மலர்க் கொடியை அவர்கள் கொலை செய்து விட்டு, நகை மற்றும்பணத்தைக் கொள்ளையடித்தனர்.
கொலையாளிகளில் ஒருவரான சக்திவேலிடமிருந்து ரூ.90,000 பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications