மாமூல் வாங்கும் போலீசார் சஸ்பெண்ட்: தமிழக அரசு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தெரிய வந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றுதமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா எச்சரித்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம், மாமூல் வாங்குவதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்துமாநிலத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் குறித்தும் ரகசிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் உள்ள எஸ்.பிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தமிழகஉள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கடுமையானஎச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
நரேஷ் குப்தா அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
- மாவட்ட எஸ்.பிக்கள், சரக டிஐஜிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடமிருந்து மாமூல் வாங்குவதாக தெரிய வந்துள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தத் தவறை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- தொடர்ந்து மாமூல் மற்றும் லஞ்சம் வாங்குவதைத் தொடர்ந்தால் முன்பு மாதிரி மெமோ அல்லது டிரான்ஸ்பர் செய்யப்பட மாட்டார்கள். மாறாக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.
தமிழக டிஜிபி நெய்ல்வாலுக்கும் தனியாக ஒரு சுற்றறிக்கையை நரேஷ் குப்தா அனுப்பியுள்ளார். அதில், லஞ்சம்வாங்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications