எந்தப் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டாம்: ஸ்டாலினுக்கு இளைஞரணி வலியுறுத்தல்
சென்னை:
ஸ்டாலினின் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வைக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து எம்.எல்.ஏ. பதவியைராஜினாமா செய்ய அவர் தயாராக உள்ளார்.
ஆனால் மேயர் பதவி, எம்.எல்.ஏ. பதவி இதில் ஏதையும் ராஜினாமா செய்ய வேண்டாம், முதல்வர் ஜெயலலிதா என்ன நடவடிக்கைவேண்டுமானாலும் எடுக்கட்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி வருகின்றனர்.
சென்னை மேயர் பதவியும், ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ பதவியும் மக்கள் அளித்தது. இதில் எந்தப் பதவியை ராஜினாமா செய்தாலும் அதுமக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்று அவரிடம் கூறப்பட்டு வருகிறது. இதனால் அவர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யலாம்என்று தெரிகிறது.
எந்தப் பதவியையும் ராஜினாமா செய்யாமல் இருப்பது, இதையடுத்து அதிமுக அரசு தனது பதவிகளில் ஏதாவது ஒன்றை பறிக்கும். அதைஎதிர்த்து வழக்குப் போடுவது, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவது, அதிமுகவின் பழிவாங்கும் படலத்தை மக்களிடம் கொண்டுசெல்வது என்று ஸ்டாலினிடம் மெகா திட்டத்தை வலியுறுத்து வருகின்றனர் பொன்முடி, துரைமுருகன் மற்றும் இளைஞரணியின் முக்கியத்தலைவர்கள்.
இளைஞரணியினரின் இந்தப் போராட்ட மனோபாவம் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுடன் மோதலில் இறங்க ஸ்டாலினுக்கு அவர் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த ஒரு நபர் ஒரு பதவி சட்டம் சட்டம் சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அமைச்சர் காளிமுத்து மற்றும் முதல்வர் ஜெயலலிதாகையெழுத்திட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் முதல்வரும் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இச் சட்டத்துக்குஆளுநரின் அனுமதியை வாய்மொழியாக ஜெயலலிதா பெற்றுவிட்டதாகவும் தெரிகிறது.
இப்போது ஊட்டியில் ஓய்வு எடுத்து வரும் ஆளுநர் ராம் மோகன் ராவ் மாத இறுதியில் சென்னை திரும்பிய பின் இச் சட்டத்திற்கு ஒப்புதல்அளிப்பார. இந்தச் சட்டம் பற்றி வல்லுநர்களிடம் அவர் கருத்து கேட்டிருப்பதாகவும் ஊர் திரும்பியவுடன் ஓ.கே. செய்துவிடுவார் என்றும்தெரிகிறது.
இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று திமுக, பாமக எம்.பிக்கள் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். மேலும் அரசு இந்தசட்டத்தை ஸ்டாலின் என்ற தனி மனிதனை பழி வாங்க கொண்டு வந்துள்ளதாகக் கூறி இந்த சட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications