ஊட்டியில் தற்கொலை செய்த பெரம்பலூர் தம்பதி
ஊட்டி:
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் குன்னூரில் மலை உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது மனைவி அன்னபூரணியுடன் ஊட்டிக்கு வந்திருந்தார்.இருவரும் குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் (இது தற்கொலை முனை என்றும் அழைக்கப்படுகிறது) என்ற இடத்திற்கு வந்தனர்.
இதன் கீழே 1,500 ஆழத்துக்கு எந்தப் பாறையும் கிடையாது. பெரும் பள்ளம் தான் உள்ளது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
இந் நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக பிரவீன்குமாரும், அவரது மனைவி அன்னபூரணியும் மலை உச்சியிலிருந்து திடீரென்றுகீழே குதித்தனர். விழுந்த வேகத்தில் இருவரும் உடல் சிதறி பலியாயினர்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று மிகுந்த சிரமத்திற்குப் பிறகு இருவரது சிதைந்த உடல்களையும் மீட்டனர்.
இந்தத் தம்பதிக்கு ராகேஷ் என்ற 5 வயது மகன் உள்ளான். பிரவீன்குமார் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இந்தத்தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications