"நக்கீரன்" நிருபர் ஜாமீனில் விடுதலை
பவானி:
நக்கீரன் பத்திரிக்கையின் நிருபரான சிவசுப்பிரமணியத்துக்கு கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் கிடைத்த போதிலும்கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக அவர் இன்னும் ஜெயிலிலேயே உள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்து பின்னர் அதிரடிப்படையினரின் உளவாளியாக மாறியபர்கூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள்மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மகாதேவன், சத்தியமூர்த்தி, பாஷாபாய் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி சிவசுப்பிரமணியமும் இந்தக் கொலை வழக்கில் 11வது குற்றவாளியாகச்சேர்க்கப்பட்டார். இவர் மீதான இந்த வழக்கு பவானி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு 90 நாட்கள் ஆகியும் சிவசுப்பிரமணியம் மீது போலீசாரால் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட முடியாததால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவருடைய வக்கீல் மோகன் பவானிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி வசந்த லீலா, சிவசுப்பிரமணியத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையம் தாக்கப்பட்ட வழக்கிலும் சிவசுப்பிரமணியத்துக்கு ஏற்கனவே ஜாமீன்கிடைத்து விட்டது.
ஆனால் அவர் மீது ராஜ்குமார் கடத்தல் வழக்கும் இருப்பதால், சிவசுப்பிரமணியம் தொடர்ந்து கோயம்புத்தூர்சிறையிலேயே இருப்பார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications