ஜனாதிபதி பதவி: நாராயணனுக்கு வாஜ்பாய் ஆதரவில்லை
டெல்லி:
கே.ஆர். நாராயணன் மீண்டும் ஜனாதிபதி ஆவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு இல்லை என்றுஅவரிடம் பிரதமர் வாஜ்பாய் நேரடியாகவே கூறிவிட்டார்.
எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் நேற்று மாலை வாஜ்பாய் திடீரென்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுநாராயணனைச் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் தவிர யாருமே இதுவரை இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவிவகிக்கவில்லை என்றும் எழுதப்படாத அந்த மரபையே தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும்கடைப்பிடிக்கிறது என்றும் நாராயணனிடம் வாஜ்பாய் கூறினார்.
இதனால் மீண்டும் ஜனாதிபதியாக எங்களால் உங்களுக்கு ஆதரவ தர இயலாது என்று வாஜ்பாய் நேரடியாகவேநாராயணனிடம் கூறிவிட்டார்.
நாராயணனே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று இடது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாடி கட்சி,லோக் ஜன சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் கூறியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று தங்களுடைய ஆதரவு உண்டுஎன்று நாராயணனை நேரில் சந்தித்துக் கூறினார்.
இந்நிலையில் நாராயணன் மீண்டும் ஜனாதிபதியாவதை ஏற்கனவே விரும்பாத வாஜ்பாயும் நேற்று நேரடியாகச்சென்று ஆதரவில்லை என்று அவரிடம் கூறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாராயணனின் ஜனாதிபதி பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அடுத்த ஜனாதிபதிபதவிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications