தேர்தல் வெற்றி: ஜெ. பெருமிதம்- கருணாநிதி மீது பன்னீர் பாய்ச்சல்
சென்னை:
வாணியம்பாடியும், அச்சிறுப்பாக்கமும் எப்போதுமே அதிமுகவின் கோட்டைகள் தான் என்பது இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் மீண்டும் நிரூபணமாகிவிட்டதாக முதல்வரும் அதிமுக பொதுச் செயாளருமான ஜெயலலிதாகூறினார்.
இந்த வெற்றி குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
அச்சிறுப்பாக்கத்தைப் பொறுத்தவரை பா.ம.கவினர் அவர்களாகத் தான் கூட்டணியை முறித்துக் கொண்டுபோனார்கள். கடந்த முறை அதிமுக ஆதரவுடன் தான் அவர்கள் வென்றார்கள். கூட்டணியில் இருந்துவெளியேபோய் இப்போது பெரும் தோல்வியை சந்தித்தி இருக்கிறார்கள்.
இந்த இரு தொகுதிகளும் இப்போது மட்டுமல்ல, எப்போதும் அதிமுகவின் கோட்டைகள் தான் என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.
பன்னீர் பாய்ச்சல்:
இதற்கிடையே தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய திமுக தலைவர்கருணாநிதியைக் கண்டித்து அமைச்சர் பன்னீர்செல்வம் மூலமாக அதிமுக காட்டமான அறிக்கை விட்டுள்ளது.அதில்,
அதிமுக மீது கருணாநிதி இல்லாததையும் பொல்லாததையும் கூறி வருகிறார். போலீஸ் அதிகாரிகளைதோட்டத்துக்கு அழைத்து அதிமுக எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டதாக கருணாநிதி பொய்க் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கீழ்தரமான பொய்கள் மூலம் குறுகிய அரசியல் லாபம் தேட அவர் விளைகிறார். சைதாப்பேட்டையில்கருணாநிதி மறுதேர்தல் கோருவது நேர்மையான தேர்தல் விதிமுறைகளில் அவர் நம்பிக்கை இழந்துவிட்டதையும்,அவரது கோழத்தனமான அரசியலையும் தான் காட்டுகிறது என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications