முஷாரபை சந்திக்காமல் நெருக்குதலை முறியடித்தார் வாஜ்பாய்
அல்மாட்டி (கஜாகிஸ்தான்):
பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபை சந்திக்க வைக்க ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வாஜ்பாயையும் முஷாரபையும் சந்திக்க வைக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. பிரிட்டனும் இந்தமுயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யா மூலமாக பேச்சுவார்த்தைக்கு இந்த இருநாடுகளும் நிர்பந்தித்தன. எந்தவிதமான நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைத் தயார் என முஷாரப் அறிவித்தார்.இதன்மூலம் இந்தியத் தாக்குதலை தடுத்துவிடலாம் என முஷாரப் கணக்குபோட்டார். மாநாடு நடக்கும்கஜாகிஸ்தானின் அதிபரும் வாஜ்பாயை பேச்சுவார்த்தைக்கு நெருக்கினார்.
ஆனால், தீவிரவாதிகளை அனுப்பி வரும் முஷாரபுடன் யார் சொன்னாலும் பேச்சு நடத்த மாட்டேன் என பிரதமர்வாஜ்பாய் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் புடின் உள்பட அனைவரது முயற்சிகளும்தோல்வியடைந்தன.
மேலும் இந்த எல்லையில் இருந்து படைகளையும் வாபஸ் பெற மாட்டோம் எனவும் வாஜ்பாய் அனைவரிடமும்தெரிவித்துவிட்டார்.
ரஷ்ய அதிபருடன் சந்திப்பு:
இதையடுத்து வாஜ்பாயையும் முஷாரைபயும் ரஷ்ய அதிபர் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார்.
மாநாட்டு தொடங்குவதற்கு முன் புடின் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையே தினந்தோறும் தாக்குதல் நடந்துவருகிறது. இது மிகுந்த கவலையளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய ரஷ்யா தயார்.
தீவிரவாதத்தை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார் புடின்.
சீன அதிபர் ஜியாங் ஜெமினும் வாஜ்பாயை சந்திக்கிறார்.
ஐ.நா. தலையிட வேண்டாம்: ரஷ்யா
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க ஐ.நாவில் தீர்மானம் ஏதும் நிறைவேற்ற வேண்டியஅவசியம் இல்லை என ரஷ்யா கருத்துத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பேசி பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இதில் ஐ.நா. தலையிட வேண்டாம் எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் 3வது நாடோ அமைப்போ தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை. இதையடுத்துஇந்தியாவின் நிலையை ஆதரித்து ரஷ்யா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளை அமெரிக்கா கண்காணிக்கும்:
இந் நிலையில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைவது நின்றுவிட்டதா என்பதை நாங்களே நேரடியாகக்கண்காணிப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.தீவிரவாதிகள் தடுக்கப்பட்டது உறுதியாகிவிட்டால், அதன் பின்னர் இந்தியா நிச்சயம் பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட், துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் ஆகியோர் இந்தவாரம் இந்தியா, பாகிஸ்தானுக்கு வரவுள்ளனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக தீர்மானம்:
இதற்கிடையே அல்மாட்டியில் நடந்து வரும் 16 நாடுகள் ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் இன்று தீவிரவாதத்துக்குஎதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய, ரஷ்ய நாடுகளின் கோரிக்கையின்பேரில் இந்தத் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இதில் தீவிரவாத்தை எதிர்க்காத நாடுகளை (பாகிஸ்தான்) கண்டித்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications