அதிமுகவினர் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
3வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே ராதாரவி முன்னிலையில் இருந்ததால் அதிமுக தொண்டர்கள்சென்னை முழுவதும் ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்து திமுகவுக்கு எதிரான கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை நடந்த அண்ணா பல்கலைக்கழம், ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனிலும்,கட்சியின் ராயப்பேட்டை அலுவலக்ததிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் தேனாம்பேட்யிைல் உள்ள அவரது இல்லத்தில்நூற்றுக்கணக்கான அதிமுகவினர் குவிந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தனது இல்லத்துக்கு வந்த ராதாரவியை அதிமுகவினர் மாலை அணிவித்தும்இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். அவருடன் நடிகரும் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ். சந்திரனும் இருந்தார்.












Click it and Unblock the Notifications