சைதை: ராதாரவி வெற்றி
சென்னை:
திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் நடிகர் ராதாரவி மாபெரும்வெற்றி பெற்றார்.
அவர் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியத்தை 11,925 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மதிமுக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் டெபாசிட் இழந்து படுதோல்வியைடந்தனர்.
வாக்குகள் விவரம்:
ராதாரவி- (அதிமுக)- 65,868
மா.சுப்பிரமணியம் (திமுக)- 53,943
நந்தகோபால் (சி.பி.எம்) - 4154
பா.சுப்ரமணியம் (மதிமுக) - 2235
இதில் மார்க்சிஸ்ட், மதிமுக வேட்பாளர்கள் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கைதொடங்கியது. முதல் இரு சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டபோது வெறும் 8 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவேட்பாளர் சுப்பிரமணியம் முன்னணியில் இருந்தார்.
ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் ராதாரவி மிக வேகமாக முன்னேறினார். வாக்கு வித்தியாசம் சில நூறுகளில்தொடங்கி சுற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க வாக்கு வித்தியாசமும் பல மடங்கு அதிகரித்தது.
11வது சுற்றிலிருந்து இருவருக்கு இடையே வாக்கு வித்தியாசம் 10,000 ஓட்டுகளுக்கும் அதிகமாக இருந்தது.
வாக்கு எண்ணிக்கை பகல் 2 மணிக்கு முடிவடைந்தது.
இந்தத் தொகுதியில் ஆண்டாண்டு காலமாய் திமுக தான் வென்று வந்தது. 1967ம் ஆண்டிலும் 1971ம் ஆண்டிலும்இந்தத் தொகுதியில் இருந்து தான் திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், இம் முறை அதிமுகவினர் சரமாரியாக கள்ள ஓட்டு போட்டதாகவும் போலி ரேசன் கார்டுகள், ஜாதிச்சான்றிதழ்களைத் தயாரித்து கள்ள ஓட்டு போட போலி வாக்காளர்களை அதிமுகவினர் அனுப்பியதாகவும் திமுகஉள்ளிட்ட எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
58 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடத்தியது தேர்தல் கமிஷன். முழு அளவில் மறு தேர்தல்நடத்தாமல் வெறும் 58 சாவடிகளில் மட்டும் மீண்டும் தேர்தல் நடத்தியதை கருணாநிதி கண்டித்திருந்தார்.
அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்ட வில்லன் நடிகர் எம்.ஆர்.ராதாவின்மகனான ராதாரவி திமுகவில் இருந்து கடந்த ஆண்டு அதிமுகவுக்குத் தாவினார். இப்போது எம்.எல்.ஏ.ஆகிவிட்டார்.
சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடி வெற்றிக்குப் பின் சட்டசபையில் அதிமுகவின் பலம் 135 ஆகஉயர்ந்துள்ளது. எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்த்து 99 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
பா.ம.க., காங்கிரஸ், த.மா.கவை உடைத்து எம்.எல்.ஏக்களை தங்கள பக்கம் இழுக்க திட்டமிட்டு வருகிறது. இந்தத்தேர்தல் வெற்றிகள் மூலம் எதிர்க் கட்சிகளை உடைப்பது அதிமுகவுக்கு எளிதாகிவிடும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications