ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க ராமதாஸ் கோரிக்கை
தஞ்சாவூர்:
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்துக் காரணங்களும் உள்ளன. சட்டம், ஒழுங்குமட்டுமல்ல, இந்தியா எதற்காக உலகப் புகழ் பெற்றுள்ளதோ, அந்த ஜனநாயகம் இங்கு படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள், கடத்தல் என தமிழகமே அல்லோகலப்படுகிறது.
மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புகளால் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறார்கள். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி பிரதிநிதிகள் தவிக்கிறார்கள்.
பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் இங்கே நிலைமை கெடுவதற்கு ஏதும் மிச்சமில்லை.
எனவே உடனடியாக தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications