மேயர் பதவி: ஸ்டாலின் ராஜினாமா இல்லை - கருணாநிதி உறுதி
சென்னை:
சென்னை மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் அதிமுக அரசு கொண்டு வந்துள்ளஒருவருக்கு ஒருவர் சட்டத்தை திமுக மதிக்கவில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாககூறியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை நல்லது தான். ஆனால் ஸ்டாலின் என்ற தனி நபரை மனதில் வைத்துக்கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கிறது.
ஸ்டாலின் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். ஆட்சியாளர்கள் அவரது பதவியைப் பறித்தால்சந்தோஷம் தான் என்றார் கருணாநதி.
இதற்கு ஜெயலலிதாவும் கடுமையான முறையிலேயே பதில் அளித்துள்ளார். இந்தச் சட்டத்திற்கு ஆளுநரும்ஒப்புதல் அளித்து விட்டார். அதைப் புறக்கணித்தால் சட்டத்தில் கூறியுள்ளபடி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் தனது இரு பதவிகளையும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிச் செய்தால்மேயர் பதவி பறிபோகும். ஆனால் இந்த சட்டம் கோர்ட்டுக்குப் போனால் நிற்காது என்று திமுக அசாத்தியமாகநம்புகிறது. ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவியைப் பறித்தால், அதன் பிறகு கோர்ட்டை அணுக திமுக முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் பதவியை ஒரு சட்டத்தின் மூலம் பறிக்கும் வகையில் இந்தியாவில் எங்குமேசட்டம் இல்லை.
கர்நாடக மாநிலத்தில் இதுபோல முன்பு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் கோர்ட்டில் அந்தசட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவேதமிழகத்திலும் நடக்கும் என்று திமுக கூறி வருகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications