தூத்துக்குடி துறைமுகத்தில் போர் ஒத்திகை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடி துறைமுகத்திலும் கடல் பகுதியிலும் இன்று போர் ஒத்திகை நடக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் இருப்பதால் தூக்குக்குடி உள்பட நாட்டின் அனைத்துதுறைமுகங்களுக்கும் முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் கப்பல்கள் இந்த துறைமுகங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில் தூத்துக்குடி துறைமுகம் இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது. கடற்படை, கடலோரக் காவல்படை, தமிழக போலீசார், தீயணைப்புப் படையினர் ஆகியோர் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.

இந்த போர் ஒத்திகைக்காக இந்திய கடற்படையின் தாக்குதல் கப்பலான ஐ.என்.எஸ். சுன்யா தூத்துக்குடிவந்துள்ளது.

துறைமுகம் தாக்கப்பட்டால் கப்பல்களை உடனடியாக அப்புறப்படுத்துவது, காயமடைந்தவர்களை உடனடியாஅப்புறப்படுத்துவது, அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது, சைரன்கள் மூலம் எச்சரிக்கை செய்வது ஆகியவைகுறித்தும் இன்று ஒத்திகை பார்க்கப்படும்.

தாக்குதலை சமாளிப்பது மட்டுமின்றி தாக்குதலை தடுக்கும் ஒத்திகையிலும் கடற்படை ஈடுபடவுள்ளது.துறைமுகத்தில் இருந்து விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்துவது போன்ற ஒத்திகையும் நடத்தப்படவுள்ளது.

இந்த போர் ஒத்திகையையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+