ஐ.எஸ்.ஐ.- தீவிரவாதிகள் தொடர்பு உண்மை: இங்கிலாந்து
லண்டன்:
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும் தீவிரவாதிகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக இங்கிலாந்துகூறியுள்ளது.
அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா லண்டன் நாடாளுமன்றத்தில் இந்திய- பாகிஸ்தான்விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அப்போது அவர் கூறுகையில்,
பதற்றத்தைத் தணிக்க இந்தியா பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தான் விமானங்கள் தனதுநாட்டின் மீது பறக்க இருந்த தடையை விலக்கியுள்ளது. இது மிகுந்த பாராட்டுக்குறியது.
அதே போல இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் நான் தொலைபேசியில் பேசியபோது,பாகிஸ்தானுக்கு புதிய தூதரை நியமிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
அதே போல பாகிஸ்தானைத் தாக்குவதற்காக அரபிக் கடலில் குவிக்கப்பட்ட தனது கடற்படை போர் கப்பல்களைஅங்கிருந்து விலக்கிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் மிகுந்தபாராட்டுக்குறியவை.
அதே நேரத்தில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து வருவது உண்மை. அந் நாட்டின் உளவுப் பிரிவின் கீழ்தான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகிய தீவிரவாதஅமைப்புகளை வழி நடத்தி வருவது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான்.
இதில் பிரிட்டனுக்கு துளி கூட சந்தேகமில்லை. இதை இந்தியா பல ஆண்டுகளாக கூற வந்தது. தீவிரவாதிகளைபாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான் உருவாக்கி வருகிறது என இந்தியா திரும்பத் திரும்பக் கூறியது. அதை பிரிட்டின்இப்போது முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. இந்தியா கூறியது முழுக்க முழுக்க உண்மை என்றார் ஜேக் ஸ்ட்ரா.
முன்னதாக தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைகின்றனர் என முதல்முதலில் கூறியவெளிநாட்டு அமைச்சரும் ஜேக் ஸ்ட்ரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டோனால்ட் ரம்ஸ்பீல்ட் வருகை:
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இன்று இந்தியா வருகிறார். முன்னதாக அவர்இஸ்லாமாபாத் செல்கிறார்.
இவர் தனது துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜை முதலில் இந்தியா- பாகிஸ்தானுக்கு அனுப்பினார்.ஆர்மிடேஜின் மிகக் கடுமையான பேச்சு காரணமாக தீவிரவாதிகளை நிரந்தரமாக தடுப்பதாக பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் அறிவித்தார்.
தீவிரவாதிகளை நிரந்தரமாக தடுக்காவிட்டால் அமெரிக்காவின் தண்டனையை பாகிஸ்தான் சந்திக்க வேண்டி வரும்என எச்சரித்தார். அவரது வருக்ைகு நல்ல பலன் கிடைத்தது. இந்தியாவுக்கு தெரியும் வகையில் தீவிரவாதிகளைதடுத்துக் காட்டுவதாக உறுதியளித்தார் முஷாரப்.
இதையடுத்து இந்தியாவும் கொஞ்சம் இறங்கி வர வேண்டும் என ஆர்மிடேஜ் நிர்பந்தித்தார். இதை இந்தியாவும்ஏற்றது. பின்னர் எஸ்டோனியா சென்று அங்கு நேடோ மாநாட்டில் இருந்த டோனால்ட் ரம்ஸ்பீல்டிடம் தனதுபேச்சுவார்த்தை குறித்து விளக்கினார் ஆர்மிடேஜ்.
இதையடுத்து டோனால்ட் ரம்ஸ்பீல்ட் பாகிஸ்தான் வழியாக இந்தியா வருகிறார்.
இந்தியாவுக்கு பாராட்டு:
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது பறக்க தடை நீக்கப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்காலின் பாவல் வரவேற்றுள்ளார்.
அதே போல அதிபர் புஷ்சின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளஷரும் இந்தியாவின் அறிவிப்பைவரவேற்றுள்ளார்.
இதற்கிடையே உறுதியளித்தபடி தனது போர்க் கப்பல்களை அரபிக் கடல் பகுதியில் இருந்து இந்தியா விலக்கஆரம்பித்துவிட்டது. இந்தக் கப்பல்கள் இப்போது வங்காள விரிகுடா நோக்கி நகர்ந்து வருகின்றன.
அதே போல பாகிஸ்தானுக்கு மீண்டும் தூதரை நியமிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தனது விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை பாகிஸ்தானும் வரவேற்றுள்ளது. நேற்று யு.ஏ.ஈ.சென்ற முஷாரப் கூறுகையில், எல்லையில் பதற்றம் தணியவில்லை. படைகளை குறைக்கப்படவில்லை. ஆனால்,போர் ஏற்படும் அபாயம் குறைந்துவிட்டது. அமைதி பரவ ஆரம்பித்துவிட்டது என்றார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications